பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: ஒரே நாளில் 2,223 பேர் விண்ணப்பம்

Added : ஜன 12, 2020
Advertisement

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் நேற்று நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், நேற்று 2,223 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த மாதம், 23ம் தேதி வெளியிடப்பட்டு, ஓட்டுச்சாவடிகள், தாலுகா அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள், வரும், 22ம் தேதி வரை விண்ணப்பிக்க தேர்தல் கமிஷன் அவகாசம் வழங்கியுள்ளது.இதற்கான சிறப்பு முகாம், உடுமலை தொகுதியிலுள்ள, 293 ஓட்டுச்சாவடிகளிலும், மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளிலும், இரு கட்டமாக நடக்கிறது.கடந்த, 4 மற்றும் 5 ம் தேதிகளில் நடந்த முகாமில், உடுமலை தொகுதியில், பெயர் சேர்க்க, 4,047 பேரும், பெயர் நீக்க, 176 பேர், திருத்தம் மேற்கொள்ள, 440 பேர், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய, 309 பேரும் என, 4,972 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மடத்துக்குளம் தொகுதியில், பெயர் சேர்க்க, 3,647 பேரும், பெயர் நீக்க, 112 விண்ணப்பங்களும், திருத்தம் மேற்கொள்ள, 328 விண்ணப்பங்களும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய, 97 விண்ணப்பங்கள் என, 4,234 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.தொடர்ந்து, இரண்டாம் கட்ட முகாம், நேற்று நடந்தது. இதில், உடுமலை தொகுதியில், பெயர் சேர்க்க, 971 பேரும், நீக்கம் செய்ய, 225 பேரும், திருத்தம் மேற்கொள்ள, 115 பேரும், ஒரே தொகுதியில், முகவரி மாற்றம் செய்ய, 87 பேர் என, 1,398 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மடத்துக்குளம் தொகுதியில், பெயர் சேர்க்க, 651 பேரும், நீக்கம் செய்ய, 30 பேரும், திருத்தம் மேற்கொள்ள, 102 பேரும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய, 42 பேர் என, 825 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அதிகாரிகள் கூறுகையில்,' வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், வரும், 22 வரை நடக்கிறது. இதில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், பட்டியலில் போட்டோ, முகவரி மாற்றம், நீக்கல் என அனைத்துப்பணிகளும் மேற்கொள்ளலாம். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் இன்றும் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X