சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச படம் எடுத்து பரப்பியவர் கைது

Added : ஜன 12, 2020
Advertisement

கும்மிடிப்பூண்டி:காதலியை ஆபாசமாக படம் எடுத்து, சமூக வலை தளத்தில் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே, பாப்பான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவன், புருஷோத்தமன், 28. எலக்ட்ரிஷியன். மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் பழகும் போது, அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து, அதை அந்த பெண்ணின் உறவினருக்கு சமூக வலை தளம் மூலம் பரப்பியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, அந்த பெண் தரப்பில் அளித்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, புருஷோத்தமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X