பொது செய்தி

தமிழ்நாடு

விதை நெல் உற்பத்தியில் குறுகிய கால ரகங்கள்: விதைச்சான்றுத்துறை தொடர் ஆய்வு

Added : ஜன 12, 2020
Advertisement

உடுமலை:அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில் உள்ள, விதை நெல் உற்பத்தியின் தரம் குறித்து வயல்கள் மற்றும் விதைப்பண்ணைகளில் விதைச்சான்றுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குறுகிய கால ரகங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில், தமிழகத்துக்கு தேவையான நெல் விதை உற்பத்தி செய்யப்படுகிறது. வேளாண்துறை பரிந்துரைக்கும் ரகங்களை தேர்வு செய்து, விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.அரசே, இந்த நெல்லை கொள்முதல் செய்து, விதைநெல்லாக, நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு விதை பண்ணைகளில், மத்திய கால மற்றும் குறுகிய கால நெல் ரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுகியகால ரகங்களான, ஏ.டி.டி., (ஆர்) 45, கோ- 57, ஏ.டி.டி., -37, ஏ3 டி16 ஆகிய ரகங்கள் அதிகம்பயிரிடப்பட்டு, விதைச்சான்றுத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை, விதை நெல் தரமாகஉற்பத்தி செய்வதை, அடிக்கடி ஆய்வு செய்கின்றனர். அதன்படி, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அதிகாரிகள் வயல்கள் மற்றும் விதைப்பண்ணைகளில் ஆய்வு செய்தனர்.அதிகாரிகள் கூறியதாவது:குறைந்தபட்ச வயல் ஆய்வு பணியை மேற்கொண்டு, வயலின் தரம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, விதைச்சான்று நெறிமுறைகள், பண்ணைகளில் சரிவர கடைபிடிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விதைச்சான்று அலுவலர்களின் வயலாய்வு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவதையும், ஆய்வு செய்தனர்.உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் சின்னக்காம்பாளையம், சீலநாயக்கன்பட்டி, கோவிந்தாபுரம், பெரும்பள்ளம் பகுதிகளில் உள்ள, விதை பண்ணைகள் ஆய்வு செய்யப்பட்டன. குறுகியகால ரக நெற்பயிர்கள், பூ பருவத்தை அடைந்துள்ளன. அதிகாரிகள்குழு வயல் ஆய்வின் மூலம், விதை பணணைகளின் தரத்தை உறுதி செய்துள்ளது.விதை பண்ணை அமைத்து, இதுவரை பதிவு செய்யாத, திருப்பூர் மாவட்ட விதை உற்பத்தியாளர்கள், உடனே விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில், உரிய கட்டணத்தை செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X