சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பை கிடங்காக மாறி வரும் டி.சுப்புலாபுரம் பெரிய ஓடை

Added : ஜன 12, 2020
Advertisement

ஆண்டிபட்டி:டி.சுப்புலாபுரம் பெரிய ஓடையை குப்பை கிடங்காக பயன்படுத்துவதால் நீர் வரத்துப்பகுதி பாதிப்படைகிறது.

டி.பொம்மிநாயக்கன்பட்டி மலைப்பகுதியில் இருந்து வரும் பெரிய ஓடை டி.சுப்புலாபுரம்
வழியாகச்சென்று வைகை ஆற்றில் சேர்கிறது.ஓடையில் இருந்த மணல் சுரண்டி எடுக்கப்பட்டு தற்போது கெட்டித்தரை மட்டுமே உள்ளது. டி.சுப்புலாபுரத்தில் இருந்து புதுார் செல்லும் வழியில் ஓடையில் ஊரின் ஒட்டு மொத்த குப்பையையும் கொட்டி வருகின்றனர். ஊராட்சியில் இருந்து கொண்டு செல்லப்படும் குப்பையும் இப்பகுதியில் கொட்டப்படுகிறது.

மழைகாலத்தில் இதன் வழியாக நீர் வரத்து ஏற்பட்டால் நீருடன் சேரும் குப்பையால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.சீமைக்கருவேல மரங்கள் பல இடங்களில் வளர்ந்துள்ளன. ஓடையை பாதுகாக்கவும், அதில் குப்பை கொட்டுவதை தடுக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X