பொது செய்தி

தமிழ்நாடு

நிலச்சரிவை தடுக்கும் புற்கள் குன்னுாரில் நடவு பணி துவக்கம்

Added : ஜன 12, 2020
Advertisement
 நிலச்சரிவை தடுக்கும் புற்கள் குன்னுாரில் நடவு பணி துவக்கம்

குன்னுார்:குன்னுாரில் வருவாய் துறையின் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யாமலிருக்கவும், நிலச்சரிவுகளை தடுக்கும் வகையிலான அரிய வகை, 'கிரிசோபோகன் நோடோலிபார்ப்' வகை புற்களை நடவு செய்யும் பணி துவங்கியது.குன்னுாரில், 'பசுமை குன்னுார்' திட்டத்தின் கீழ், ஜெயின் இளைஞர்கள் நல சங்கம் சார்பில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதன் ஒருபகுதியாக, 'லெவல் கிராசிங்' அருகே, குன்னுார் வருவாய் துறைக்கு சொந்தமான இடைச்சேரி பகுதியில், 'கோல்டன் சிப்ரஸ்' உட்பட சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார்.வருவாய் துறையின் இடமான இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் நிகழாமல் இருக்கவும், நிலச்சரிவு அபாயம் ஏற்படாமல் இருக்கவும், இங்கு, 300க்கும் மேற்பட்ட சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. மேலும், நிலச்சரிவுகளை தடுக்கும் வகையிலான அரியவகை 'கிரிசோபோகன் நோடோலிபார்ப்' வகை புற்களும் நடவு செய்யப்பட்டு வருகிறது .ஜெயின் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'குன்னுாரில் 'விருஷம்-10 கே' என்ற தலைப்பில், மரக்கன்றுகள் நடவு பணி கடந்த நவ., மாதம், குன்னுார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலையம் அருகே நடந்தது.இதில், போடோகார்ப்பஸ், காலிஸ் காலிஸ்டேமொன், ஜகரண்டா உள்ளிட்ட, 500 மரங்கள் நடவு செய்யப்பட்டன. வளர்ச்சி குறித்து, சமூக வலைதளத்தின் மூலம் பதிவு செய்து, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதில், 98 சதவீதம் வளர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட நாற்றுகள் மாற்றப்பட்டன. தொடர்ந்து, வருவாய் துறை இடத்தில் நிலச்சரிவை தடுக்கும் புற்கள் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X