பொது செய்தி

தமிழ்நாடு

ெஹத்தையம்மன் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Added : ஜன 12, 2020
Advertisement
 ெஹத்தையம்மன் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி:கோத்தகிரி ஒன்னதலை மடிமனையில் ஹெத்தையம்மன் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.நீலகிரியில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 'தொதநாடு சீமைக்கு' உட்பட்ட, ஒன்னதலை கிராமத்தில் இருந்து, செங்கோல் பக்தர்கள், மடிமனைக்கு அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்து, வீடுகளுக்கு செல்லாமல், அங்கேயே விரதம் இருந்து வருகின்றனர்.நாள்தோறும், அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 'பொரங்காடு சீமை'க்கு உட்பட்ட, கேர்பெட்டா, பேரகணி மற்றும் காத்துகுளி மடிமனைகளில் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, ஒன்னதலை மடிமனையில் விழா சிறப்பாக நடந்தது. காலை, 11:00 மணிக்கு, பெத்தளா ஹெத்தையம்மனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சி இடம்பெற்றது. விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலாசார உடையுடன் பங்கேற்று, காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர். பல்லாயிரம் பேருக்கு அன்னதானம் நடந்தது.முக்கிய விழாவான இன்று (ஞாயிறு) பகல், 12:00 மணிக்கு, மடிமனையில் இருந்து, வண்ண குடைகளின் கீழ், செங்கோல் பக்தர்கள் அம்மனை கிராம கோவிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 'கத்திகை' நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X