பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் முதன்முதலாக தோடர் சமுதாயத்திற்கு பதவி

Added : ஜன 12, 2020
Advertisement

ஊட்டி:மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு முதன் முதலாக தோடர் இனத்தை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.நீலகிரியில், மாவட்ட ஊராட்சி, நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கான தலைவர் தேர்தல் அந்தந்த ஒன்றியங்களில் நடந்தது. தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., வை சேர்ந்த பொன்தோஸ் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். மாவட்ட ஊராட்சி, 6 இடத்தில், 5 இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., ஒரு இடம் என்பதால் வெற்றி பெற்ற தோடர் இனத்தை சேர்ந்த சசிகலா தலைவருக்கான மறைமுக தேர்தலில் பங்கேற்கவில்லை.இதனால், மனு தாக்கல் செய்த தி.மு.க.,வை சேர்ந்த பொன்தோசை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. பொன்தோஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, தேர்தல் அதிகாரி அறிவித்தார். மாநிலத்தில் தோடர் இனத்தை சேர்ந்த பொன்தோஸ் என்பவர் முதன் முதலாக, நீலகிரியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X