பொது செய்தி

தமிழ்நாடு

எரிபொருள் பறிமுதல் தொடர் விசாரணை

Added : ஜன 12, 2020
Share
Advertisement

பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடி பஜாரில் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.பந்தலுார் அருகே, சேரம்பாடி பஜாரில் தனியார் ஒருவர் வீட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்வதாக, கூடலுார் ஆர்.டி.ஓ.,வுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, பந்தலுார் வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அம்சா என்பவரது வீட்டில் இரண்டு கேன்களில், 85 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஒரு கேனில், 20 லிட்டர் டீசல் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் பெட்ரோல் பங்கில் ஒப்படைத்தனர். அம்சா,- 63, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X