சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளைஞர் தற்கொலையில் சந்தேகம் பழங்குடியினர் சாலை மறியல்: ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை

Added : ஜன 12, 2020
Share
Advertisement

கூடலுார்:தேவர்சோலையில், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பழங்குடி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கூடலுார் தேவர்சோலை கவுடங்கொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 23. இவர் மீது இருந்த, திருட்டு புகார் தொடர்பான விசாரணைக்காக, தேவர்சோலை எஸ்.ஜ., விஜயசண்முகநாதன், 9ம் தேதி, அவரை விசாரணைக்கு பைக்கில் அழைத்து வரும் போது, வழியில் குதித்து ஓடி விட்டார்.நேற்று முன்தினம், அவர் தேவன் இரண்டு பகுதியில், விஷம் குடித்து இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில், 'அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; அதில், தேவர் சோலை எஸ்.ஐ.,க்கு தொடர்பு உள்ளது,' என, தெரிவித்து, பழங்குடி மக்கள், கூடலுார் போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்தனர். 'விசாரணை செய்யப்படும்; பிரேத பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,'என, டி.எஸ்.பி., ஜெய்சிங் கூறினார்.இதனை ஏற்காத அவர்கள், ஆர்.டி.ஓ., விசாரணை கேட்டு, மதியம், 2:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். தொடர்ந்து, சிறிது நேரத்தில் போராட்டத்தை கைவிட்டனர். டி.எஸ்.பி., ஜெய்சிங் கூறுகையில், ''இளைஞர் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X