பொது செய்தி

தமிழ்நாடு

பெரும்பாலான பதவிகளை கைப்பற்றிய தி.மு.க.,: ஊட்டி ஒன்றியத்தில் மட்டும் அ.தி.மு.க.,

Added : ஜன 12, 2020
Advertisement

ஊட்டி;நீலகிரியில், மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர்; துணைத்தலைவர் பதவிகளை தி.மு.க., தக்க வைத்த நிலையில், ஊட்டி ஒன்றியத்தில் மட்டும் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.நீலகிரியில், 'ஊரக உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்,' என, 493 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த பதவிகளுக்கு வெற்றி பெற்ற அனைவரும் கடந்த, 6ம் தேதி முறைப்படி பதவியேற்று கொண்டனர்.இந்நிலையில், மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில், மாவட்ட ஊராட்சி தலைவராக பொன்தோஸ்-தி.மு.க.,; துணைத்தலைவராக உமாராஜன்-தி.மு.க., தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த இரண்டு பதவிகளை தி.மு.க., தக்க வைத்தது.ஒன்றிய பதவிகள்ஊட்டி ஒன்றியத்தில் தலைவராக அ.தி.மு.க., வை சேர்ந்த மாதன், துணைத்தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சித்ரா வெற்றி பெற்றனர். இந்த இரண்டு பதவிகளுக்கு சம நிலையில் ஓட்டு விழுந்ததால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கோத்தகிரி ஒன்றியத்தில், தலைவராக ராம்குமார்-தி.மு.க.,; துணைத்தலைவராக தேவராஜ்-அ.தி.மு.க., தேர்ந்தெடுக்கப்பட்டனர். குன்னுார் ஒன்றியத்தில் தலைவராக சுனிதா-தி.மு.க.,; துணைத்தலைவராக நாக சுந்தரி-தி.மு.க., தேர்வாகினர்.கூடலுார் ஒன்றியத்தில் தலைவராக கீர்த்தனா-தி.மு.க.,; துணைத்தலைவராக தாமோதரன்-தி.மு.க., இதன் மூலம், ஊராட்சி ஒன்றிய அளவில் தலைவர், துணைத்தலைவர் பதவியை தி.மு.க., தக்க வைத்தது. ஊட்டி ஒன்றியத்தில் தலைவர் பதவியை அ.தி.மு.க., தக்க வைத்தது.கிராம ஊராட்சி துணை தலைவர் விபரம்ஊட்டி ஊராட்சிஇத்தலார்-ரமேஷ்; உல்லத்தி-ராஜவேணி; எப்பநாடு-மனோகரன்; கக்குச்சி- கிருஷ்ணமூர்த்தி; கடநாடு-ஆஷா; கூக்கல்-ரமேஷ்;தும்மனட்டி-சந்தியா; துானேரி-சுப்ரமணி; தொட்டபெட்டா-நித்தியா;நஞ்சநாடு-அருண்குமார்; பாலகொலா- ரீட்டா; முள்ளிகூர்-காமராஜ்; மேல்குந்தா-வீரமலை.குன்னுார் ஊராட்சிஉபதலை - செல்லகுமார்மூர்த்தி; எடப்பள்ளி - கோபால்ராஜ்; பர்லியார்-தீனதயாளன்; பேரட்டி - சுகன்யா; மேலுார் -நாகராஜ்; வண்டிசோலை-ராஜமாணிக்கம்.கூடலுார் ஊராட்சிசேரங்கோடு-சந்திரபோஸ்; நெலாக்கோட்டை- நவுப்பன்; மசினகுடி-நாகேஷ்; முதுமலை-ஜனார்த்தனன்; ஸ்ரீமதுரை-ரெஜிமேத்யு.கோத்தகிரி ஊராட்சி அரகோடு - சுந்தரி; கடினமாலா - அள்ளிராஜூ; குஞ்சப்பனை - மஞ்சுளா; கெங்கரை - பாபு; கொணவக்கரை - பிரவீன்; கோடநாடு-மகேந்திரபிரசாத்; தெங்குமரஹாடா-செல்வம்; தேனாடு-அம்சவேணி; நடுஹட்டி-மஞ்சு; நெடுகுளா-மனோகரன்; ஜக்கனாரை-ஜெயந்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராம ஊராட்சியை பொறுத்தவரையில் அ.தி.மு.க., ஆதரவு பெற்றவர்கள் துணைத்தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.குழந்தையை தேடிய ஊழியர்...ஊட்டி ஒன்றியத்தில் காலை தலைவர் தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் மாதன், தி.மு.க., சார்பில் காமராஜ் போட்டியிட்டனர். 22 பேரில் இருவரும் சம நிலையில் ஓட்டுகள் பெற்றனர். தேர்தல் அதிகாரி மகாராஜ் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்தார். பின், குலுக்கல் சீட்டை எடுக்க குழந்தைகள் யாராவது இருந்தால், அழைத்து வருமாறு அதிகாரி தெரிவித்தார். அரை மணி நேரம் குழந்தைகளை தேடிய ஊழியர், ஒருவழியாக அருகில் இருந்த தனியார் பள்ளியில் படிக்கும், 2ம் வகுப்பு மாணவி, அர்ஷனாவை அழைத்து வந்து குலுக்கல் சீட்டை எடுத்த பின், முடிவு அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X