பொது செய்தி

தமிழ்நாடு

மஹாராஷ்டிரா திராட்சை வரத்து குறைவு கம்பம் பழம் விலை அதிகரிக்க வாய்ப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

கம்பம்:மஹாராஷ்டிராவில் இருந்து திராட்சை பழம் வரத்து பெரிய அளவில்இல்லாததால்,
கம்பம் பள்ளத்தாக்கு திராட்சைக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள்
எதிர்பார்க்கின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் செய்யப்படுகிறது. ஆண்டுமுழுவதும் திராட்சை கிடைக்கிறது. திராட்சையின் தாயகம் என்ற வர்ணிக்கப்படும் மஹாராஷ்டிராமாநிலத்தில் ஆண்டுக்கு இரண்டு அறுவடை மட்டுமே நடைபெறுகிறது.பொதுவாக அங்கிருந்து டிசம்பரில் ஆரம்பித்து மார்ச் மாதம் வரை விதையில்லா திராட்சைதமிழகத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். அந்த சீசனில் கம்பம் பள்ளத்தாக்கில்விளையும்திராட்சைக்கு விலை கிடைக்காது.

ஆனால் இந்த சீசனில் மஹாராஷ்டிராவிலிருந்து இன்னமும் போதிய அளவு வரத்து இல்லை. அங்கு மழையால் திராட்சை பயிர் சேதமானதே காரணம். எனினும் ஜனவரிக்கு பின் கூடுதல் வரத்து இருக்கும் என கூறுகின்றனர். அந்த திராட்சை வரத்து குறைவால், கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியாகும் திராட்சைக்கு தேனி, வெளிமாவட்டங்களில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

மஹாராஷ்டிரா பழம் கிலோ ரூ.120க்கு விற்கப்படும் நிலையில், இங்குள்ள பழம் தோட்டத்தில் கிலோ ரூ.30க்கு வாங்கப்பட்டு, மார்க்கெட்டில் ரூ.80க்கு விற்கப்படுகிறது. இதுமேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களில் திராட்சை மகசூல் நல்ல நிலையில் உள்ளது.

நாராயணத்தேவன்பட்டி திராட்சை தோட்ட குத்தகை விவசாயி கூடலிங்கம்கூறுகையில், 'பனியால் திராட்சை தோட்டங்களுக்கு பாதிப்பு இல்லை.மழை பெய்து பனி அடித்தால் தான்
சிக்கல். இப்போதுள்ள நிலையில் விலையில் பிரச்னை இல்லை. மஹாராஷ்டிரா திராட்சை பழம் அதிகம் வர வாய்ப்பில்லை எனக்கூறப்படுவதால் இங்கு தோட்டங்களில் பழம் உள்ள
விவசாயிகளுக்கு விலையால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X