பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்முனைவோருக்கு அழைப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

பெரியகுளம்:இயற்கை முறை முருங்கை இலை உற்பத்தி புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் பயிற்சிக்கு , தோட்டக்கலைகல்லுாரி நிர்வாகம் விவசாயிகள் , தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரிமுதல்வர் ஆறுமுகம் கூறியதாவது:இந்தியாவை
தாயகமாகக் கொண்டு உலகத்தின் வெப்பமண்டல பிரதேசங்களில் பரவலாக வளரும்
இயல்புடையது முருங்கை மரம்.இதன் காய், இலை, பூ, பட்டைவேர் என மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது.

உலகின் முருங்கை இலை உற்பத்தியில் இந்தியா 80 சதவீதம் என்ற முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் பெருகி வரும் சந்தை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, புதிய தொழில்
முனைவோர்களை முருங்கை உற்பத்திக்கு ஊக்குவிப்பதற்கு கல்லுாரி நிர்வாகம் முடிவு
செய்துள்ளது.இயற்கை முறை முருங்கை இலை உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்நாளை(ஜன.13)மதியம் 2:00 மணிக்கு பெரியகுளம் தோட்டக்கலைக்
கல்லுாரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில் நடக்கிறது.

இதற்கான ஏற்பாட்டை பெரியகுளம் தோட்டக்கலை தொழில்மேம்பாட்டு மையம் செய்து இருக்கிறது. முருங்கை உற்பத்தியில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவோர் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பதிவுக்கட்டணம் ரூ.150. மேல்விபரங்களுக்கு 93619 21828 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X