நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு: நூலக வாசகர்கள் அதிருப்தி

Added : ஜன 12, 2020
Advertisement

வால்பாறை:வால்பாறை நுாலகத்தின் முன்பக்கம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரின் மத்தியில் நுாலகம் அமைந்துள்ளது. இந்த நுாலகத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளன. நுாலகத்தை பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும், 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் நுாலகத்திற்கு வாசிப்பதற்கு வருகின்றனர்.
இந்நிலையில், நுாலகத்தின் நுழைவுவாயிலின் இருபுறமும், விதிமுயை மீறி நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். இதனால், நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் அமைதியாக படிக்க முடியாமலும், குறிப்பு எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.நுாலகத்தின் முன்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X