பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டின் முதல் சந்திரகிரகணம் :பார்வையிட்ட குரல்குட்டை மக்கள்

Added : ஜன 12, 2020
Share
Advertisement
 ஆண்டின் முதல் சந்திரகிரகணம் :பார்வையிட்ட குரல்குட்டை மக்கள்

உடுமலை:உடுமலை, குரல்குட்டை ஊராட்சியில் கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், பொதுமக்கள் சந்திர கிரகணத்தை பார்வையிட்டனர்.இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், நேற்றுமுன்தினம் இரவு நிகழ்ந்தது. இந்த ஆண்டில் மொத்தமாக, நான்கு சந்திர கிரகணங்கள் உள்ளதாக 'நாசா' அறிவித்துள்ளது. மேலும், இந்த கிரகணத்துக்கு, 'ஓநாய் சந்திர கிரகணம்' எனவும் நாசா பெயரிட்டுள்ளது.நிகழ்வை காண, உடுமலையில், கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், குரல்குட்டை ஊராட்சியில், ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வைக்காண தொலைநோக்கி அமைக்கப்பட்டது.கிரகணம், நேற்றுமுன்தினம் (10ம் தேதி) இரவு, 10:37 மணிக்கு துவங்கி, நேற்று அதிகாலை, 2:42 மணி வரை நடந்தது. அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், சந்திர கிரகணத்தின் மூன்று வகைகள் குறித்தும், சந்திர கிரகணம் ஏற்படுவதன் காரணம் குறித்தும் விளக்கமளித்தார். அறிவியல் கழகத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X