பொது செய்தி

தமிழ்நாடு

வருஷம் மூணு ஆச்சு! சர்வீஸ் ரோடு அமைப்பது எப்போது? நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி

Added : ஜன 12, 2020
Advertisement
 வருஷம் மூணு ஆச்சு! சர்வீஸ் ரோடு அமைப்பது எப்போது? நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், வடக்கிப்பாளையம் ரோடு ரயில்வே பாலம்; மீன்கரை ரோடு சீனிவாசபுரம் சுரங்க பாலம், ஆகியவை கட்டி முடித்து மூன்று ஆண்டுகள் கடந்தும், சர்வீஸ் ரோடுகள் அமைக்காததால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சி - வடக்கிபாளையம் ரோடு, வடக்கிபாளையம், சூலக்கல், புரவிபாளையம், நடுப்புணி உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், கேரளாவுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது.முக்கியமான வழித்தடத்தில், ஆச்சிபட்டி சங்கம்பாளையம் பகுதி அருகே, பொள்ளாச்சி - போத்தனுார் அகல ரயில் பாதை அமைந்துள்ளது. இந்த ரயில் பாதையை கடக்க, ரயில்வே நிர்வாகம், 350 மீட்டர் நீளத்தில், ஐந்து கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டியது. தற்போது, இந்த பாலம் பயன்பாட்டில் உள்ளது.ரயில்வே துறை பாலம் கட்டி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்காததால், முழு அளவிலான பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.ஆ.சங்கம்பாளையம் மேம்பாலத்தை சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக, பாலம் கட்டும் போது, இரு புறமும் சர்வீஸ் ரோடு அமைத்து தருவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், பாலம் கட்டி முடித்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. ரயில்வே துறை சர்வீஸ் ரோடு அமைக்க மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சர்வீஸ் ரோடு அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தியும், ரோடு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் வருவாய்துறை, ரயில்வே துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள் கூறுகையில், 'ரயில்வே துறை மூலமாக மேம்பாலம் கட்டப்பட்டபின், சர்வீஸ் ரோடு பணிகளும் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் நடைபெறவில்லை.இதனால், கரடு முரடான பாதையில் சென்று வருவது சிரமமாக உள்ளது. நடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண சர்வீஸ் ரோடு அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்,' என்றனர்.
இங்கேயும் இப்படித்தான்!
பொள்ளாச்சி, சீனிவாசபுரம் சுரங்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் தரமின்றி அமைக்கப்பட்டதால், கான்கிரீட் ஓடுதளம் அடிக்கடி பெயர்ந்து, வாகனங்களை பதம் பார்க்கிறது. இப்பாலத்தில் இருபக்கமும், சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை. மேடு, பள்ளமாக உள்ள ரோடு, மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறுகிறது. இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X