பொது செய்தி

தமிழ்நாடு

வாத்து குஞ்சுகள் விற்பனை ஜோரு!

Added : ஜன 12, 2020
Advertisement
 வாத்து குஞ்சுகள் விற்பனை ஜோரு!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், வாத்து குஞ்சுகள் விற்பனை நடக்கிறது.வாத்துகளில், பெருவாத்து, சிறுவாத்து என பலவகை உள்ளன. வாத்துகள், நல்ல நீரிலும், கடல் நீரிலும் வாழக்கூடியவை.பெரும்பாலான வாத்து வகைகளில், அதன் அலகு அகண்டு தட்டையாகவும், இரையை தோண்டி எடுப்பதற்கு ஏற்றவாறு இருக்கும். வாத்துகள் பல்வேறுபட்ட உணவை எடுத்துக்கொள்பவை. புற்கள், நீர் தாவரங்கள், மீன்கள், புழுக்கள், சிறுநத்தைகள், தவளை போன்ற உயிரிகளை உணவாக உண்கின்றன.கோழி வளர்ப்புக்கு அடுத்தபடியாக, வாத்து வளர்ப்பு முக்கியமானதாக வளர்ந்து வருகிறது. வயல்வெளிகளில் மேய விடுவதால், புழுக்கள், பூச்சிகளை உட்கொண்டு, சாகுபடி செய்த பயிர்கள் நன்றாக வளர்வதற்கு உறுதுணையாக வாத்துகள் உள்ளன.பொள்ளாச்சி பகுதியில் வாத்து வளர்ப்போர், வயல்வெளிகளில் இதுபோன்று வாத்துகளை விடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.ஆண்டுதோறும் பருவ காலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் வாத்துகள், பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன.தற்போது, தருமபுரியில் இருந்து கொண்டு வரப்பட்ட வாத்து குஞ்சுகள், கோவை ரோட்டில் விற்பனை செய்யப்படுகிறது.வாத்து விற்பனை செய்யும் பத்மநாபன் கூறுகையில், ''வாத்து குஞ்சுகள் ஜோடி, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு வாத்து கோழி என அழைக்கப்படும் வாத்துகளை, வாங்கி வளர்க்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.தோட்டங்கள் மற்றும் தோட்டத்து சாலைகளில் இவ்வகையான வாத்துகளை வளர்க்கலாம். புழுக்களை உட்கொண்டு, பயிர்கள் நன்றாக வளர இவை உதவுவதால், பலரும் விலைக்கு வாங்கிச்செல்கின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X