பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு பயிற்சி

Added : ஜன 12, 2020
Advertisement

வால்பாறை:இந்திய வேளாண் அறிவியல் கழகத்தின் சார்பில், மலைவாழ் மக்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி நடந்தது.வால்பாறை அடுத்துள்ள அட்டகட்டி மனமகிழ் மன்றத்தில், கோவை, இந்திய வேளாண் அறிவியல் கழகத்தின் சார்பில், மலைவாழ் மக்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி நடந்தது.பயிற்சியை மனையியல்துறை வல்லுநர் கோமதி, உளவியல் தொழில்நுட்ப வல்லுநர் சுரேஷ்குமார் ஆகியோர், சுயதொழில் துவங்குவதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். வால்பாறை நகராட்சி சமுதாய அமைப்பாளர் வாசுகி பயிற்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''மலைவாழ் மக்கள் சுயதொழில் துவங்க கடன் வழங்கப்படுகிறது. விருப்பப்பட்ட சுயதொழிலை செய்து, சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் வாழ்க்கைத் தரம் உயரும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான கடன் உதவி, மானியத்துடன் பெற்றுத்தரப்படும்,'' என்றார்.பயிற்சியில், காடம்பாறை, மாவடப்பு, கருமுட்டி, வெள்ளிமுடி, ஈத்தக்குழி ஆகிய செட்டில்மெண்ட் பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X