பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகுளம் ஒன்றியத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பை கண்டித்து ரோடு மறியல்

Added : ஜன 12, 2020
Advertisement

தேவதானப்பட்டி,:பெரியகுளம் ஒன்றிய தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க., மற்றும் அ.ம.மு.க ., வினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

இந்த ஒன்றியத்தில் 16 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் 8 தி.மு.க. 6 அ.தி.மு.க. தே.மு.தி.க. அ.ம.மு.க., தலா ஒன்று என வெற்றி பெற்றனர். இந்நிலையில் அ.ம.மு.க. விற்கு ஒன்றியத் துணைத்தலைவர் பதவியை கொடுத்து தலைவர் பதவியை தக்க வைக்க தி.மு.க., திட்டமிட்டது. ஆனால் தலைவர் பதவிக்கு தங்கவேல், செல்வம் போட்டி போட்டனர். தலைவர் பதவி தங்கவேலுக்கு உறுதி செய்யப்பட்டதால் அதிருப்தியில் இருந்த செல்வம், தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு. க. வில் இணைந்தார். இதனால் தி.மு.க.வின் பலம் 7 ஆக குறைந்தது. அ.தி.மு.க, 7 தே.மு.தி.க 1, தி.மு.க., 7. அ.ம.மு.க., 1 என இரு கட்சிகளும் சமபலத்தில் இருந்தன.
ஒத்திவைப்பு

இந்நிலைலையில் நேற்றுகாலை பெரியகுளம் ஒன்றியத் தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுகதேர்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. அலுவலராக பெரியகுளம் ஆர்.டி. ஓ . சினேகா பொறுப்பில் இருந்தார். தி.மு.க., மற்றும் அ.ம.மு.க.,கவுன்சிலர்கள் எட்டு பேர் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அ.தி.மு.க ., தே.மு.தி.க., கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. இதனால் கோரம் இல்லாததால் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மாலை 3:00க்கு துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடந்தது. அப்போதும் கோரம் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சாலை மறியல்

இந்நிலையில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி தி.மு.க., மற்றும் அ.ம.மு .க சார்பில் தேர்தல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.மாலை 3: 45 மணிக்கு தி.மு.க . மாவட்ட பொருளாளர் அருணா சேகர், பெரியகுளம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் பாண்டியன், பெரியகுளம் ஒன்றிய அ.ம.மு.க., செயலாளர் கணேசன் ,பெரியகுளம் நகர தி.மு க . செயலாளர் முரளிமற்றும் பொறுப்பாளர்கள், வடுகபட்டியில் உள்ள பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் முன் ரோடு மறியல் செய்து அ.தி.மு.க அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி., ஆறுமுகம் பேசியதால் மறியல் முடிவுக்கு வந்தது.
வருஷநாடு

கடமலை- - மயிலை ஒன்றியத்தில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.,வினர் 7 பேர், தி.மு.க.,வினர் 7 பேர் வெற்றி பெற்றனர். ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆண்டிபட்டி மகாராஜன் எம்.எல்.ஏ., வுடன் தி.மு.க., கவுன்சிலர்கள் 7 பேர் மட்டும் அலுவலகத்திற்கு வந்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர் 7 பேரும் வரவில்லை. தி.மு.க., 14 வார்டு கவுன்சிலர் சித்ரா, ஒன்றிய தலைவருக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ஆனால் போதிய கோரம் இல்லாததால் தேர்தலை மறு தேதி குறிப்பிடாமல் தேர்தல் அதிகாரி இளங்கோவன் ஒத்தி
வைத்தார். தி.மு.க., கவுன்சிலர்கள் அ.தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X