பொது செய்தி

தமிழ்நாடு

5 ஊராட்சிகளில் உறுப்பினர் 'கோரம்' இல்லை: துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சின்னநெகமம், கொல்லபட்டி ஊராட்சிகளிலும்; கிணத்துக்கடவு ஒன்றியம் குருநெல்லிபாளையம், தேவராயபுரம், குளத்துப்பாளையம் ஊராட்சிகளிலும் உறுப்பினர் 'கோரம்' இல்லாததால், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.ஊரக உள்ளாட்சி தேர்தலில், உறுப்பினர்களில் ஒருவரை துணைத்தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.
அதற்கு, ஊராட்சி தலைவர், உறுப்பினர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது.மறைமுக தேர்தல் நடத்தி துணைத்தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தேர்தல் நடத்த, உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கு மேல் வருகை இருக்க வேண்டும். உதாரணமாக, 10 உறுப்பினர் இருந்தால், 6 உறுப்பினர்கள் வருகை பதிவு இருந்தால் மட்டுமே, தேர்தல் நடத்த முடியும். குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகை இருந்தால், 'கோரம்' இல்லை என பதிவு செய்து, துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படும்.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருநெல்லிபாளையத்தில் தலைவராக விஜய்சங்கர் பதவி ஏற்றுள்ளார். நேற்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
இதில், மொத்தமுள்ள ஆறு வார்டு உறுப்பினர்களில், பழனிசாமி, சத்யா, நடராஜ் மட்டுமே தேர்தலுக்கு வந்தனர். மீதமுள்ள நாகரத்தினம், நந்தினி, வெங்கடாசலம் ஆகியோர் வரவில்லை. உறுப்பினர் 'கோரம்' இல்லாததால், துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.தேவராயபுரம் ஊராட்சியில், ஊராட்சி தலைவராக சுந்தரி பதவி ஏற்றுள்ளார். நேற்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.மொத்தமுள்ள ஒன்பது வார்டு உறுப்பினர்களில், ஜானகி, மாணிக்காள், திருப்பதி கிருஷ்ணன், ஆறுசாமி ஆகிய நான்கு பேர் மட்டுமே வந்தனர்.மற்ற உறுப்பினர்கள் சித்ரா, ராஜன், வேலுமணி, ஜெகதீஷ், பொன்னாத்தாள் ஆகியோர் வரவில்லை. இதனால், 'கோரம்' இன்றி, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.குளத்துப்பாளையம் ஊராட்சி தலைவராக கன்னிகாபரமேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலுக்கு, மொத்தமுள்ள ஆறு வார்டு உறுப்பினர்கள், கோவிந்தசாமி, முத்தையன், சித்ராதேவி மூவர் வந்தனர்.வடிவேல், ரேவதி, முத்துலட்சுமி ஆகிய மூவரும் வரவில்லை. இதனால், கோரம் இன்றி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், துணை தலைவர்கள் தேர்தல் நடந்தது. இதில், 37 ஊராட்சிகளில் துணை தலைவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சின்னநெகமம், கொல்லபட்டி ஊராட்சிகளில், துணை தலைவர் தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் அதிகாரிகள் காத்திருந்தும், சின்னநெகமம் ஊராட்சியில் துணை தலைவர் தேர்தலுக்கு, ஆறு உறுப்பினர்களில், மூன்று பேர் மட்டுமே இருந்தனர்.கொல்லபட்டி ஊராட்சியில், ஆறு உறுப்பினர்களில், மூன்று பேர் அலுவலகம் வந்ததும் சிறிது நேரத்தில் வெளியேறி விட்டனர். மற்ற மூன்று பேர் வர வில்லை.இதனால், சின்னநெகமம், கொல்லபட்டி ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X