பிச்சை எடுத்து நிதி திரட்டிய சந்திரபாபு நாயுடு

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (43)
Advertisement
பிச்சை எடுத்து நிதி திரட்டிய  சந்திரபாபு நாயுடு

இந்த செய்தியை கேட்க

திருப்பதி: அமராவதி தலைநகர் போராட்டத்திற்காக, திருப்பதி நகர வீதிகளில் பிச்சை எடுத்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நிதி திரட்டினார்.

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின், தற்போதய ஆந்திர மாநிலத்திற்கு அமராவதி உட்பட விசாகப்பட்டினம், கர்ணுால் ஆகிய நகரங்களையும் மாநில தலைநகரங்கள் ஆக்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது.





ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை ஏற்படுத்துவது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட குழு, தற்போதைய தலைநகர் அமராவதியை, சட்டமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை, நிர்வாகத் தலைநகராகவும், கர்ணுாலை, நீதி பரிபாலன தலைநகராகவும் அமைக்க பரிந்துரை செய்துள்ளது.இந்நிலையில், அமராவதியில் ஒட்டுமொத்த தலைநகரத்தை ஏற்படுத்த அரசுக்கு, 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கொடுத்த விவசாயிகள், அரசின் முயற்சிக்கு எதிராக, 24 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு, தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., இடது சாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில், இக்கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள அமராவதி தலைநகர கூட்டு போராட்ட குழு, தங்களுடைய போராட்டத்தை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று மாலை திருப்பதிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, கூட்டு போராட்ட குழுவினர், திருப்பதி நகர வீதிகளில், பொதுமக்களிடம் பிச்சை எடுத்து, அமராவதி தலைநகர போராட்டத்திற்கு நிதி திரட்டினர்.


Advertisement


வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
13-ஜன-202020:56:06 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி மோடிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த பலனை நாயுடு அனுபவிக்கிறார். இன்னும் அனுபவிப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
13-ஜன-202000:10:47 IST Report Abuse
Aarkay செம ஐடியா சொந்த காசு தம்படி செலவில்லாமல், விளம்பரம் கஷ்டப்பட்டு அமராவதியை சுற்றி வளைத்துப்போட்ட காலிமனைகளை விற்றாக வேண்டுமே பாவம் அவர் கவலை அவருக்கு
Rate this:
Share this comment
Cancel
V. Viyu -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-202018:05:07 IST Report Abuse
V. Viyu நாயுடு காருக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது, இவர் அரசியல் செய்வதை விட்டுவிட்டு இந்த பணியே தொடரலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X