# Naidu spreads 'jholi' and begs on streets to raise funds for Amaravati movement # | பிச்சை எடுத்து நிதி திரட்டிய சந்திரபாபு நாயுடு| Dinamalar

பிச்சை எடுத்து நிதி திரட்டிய சந்திரபாபு நாயுடு

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (43)
பிச்சை எடுத்து நிதி திரட்டிய  சந்திரபாபு நாயுடு

இந்த செய்தியை கேட்க

திருப்பதி: அமராவதி தலைநகர் போராட்டத்திற்காக, திருப்பதி நகர வீதிகளில் பிச்சை எடுத்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நிதி திரட்டினார்.

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின், தற்போதய ஆந்திர மாநிலத்திற்கு அமராவதி உட்பட விசாகப்பட்டினம், கர்ணுால் ஆகிய நகரங்களையும் மாநில தலைநகரங்கள் ஆக்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது.





ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை ஏற்படுத்துவது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட குழு, தற்போதைய தலைநகர் அமராவதியை, சட்டமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை, நிர்வாகத் தலைநகராகவும், கர்ணுாலை, நீதி பரிபாலன தலைநகராகவும் அமைக்க பரிந்துரை செய்துள்ளது.இந்நிலையில், அமராவதியில் ஒட்டுமொத்த தலைநகரத்தை ஏற்படுத்த அரசுக்கு, 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கொடுத்த விவசாயிகள், அரசின் முயற்சிக்கு எதிராக, 24 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு, தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., இடது சாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில், இக்கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள அமராவதி தலைநகர கூட்டு போராட்ட குழு, தங்களுடைய போராட்டத்தை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று மாலை திருப்பதிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, கூட்டு போராட்ட குழுவினர், திருப்பதி நகர வீதிகளில், பொதுமக்களிடம் பிச்சை எடுத்து, அமராவதி தலைநகர போராட்டத்திற்கு நிதி திரட்டினர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X