பொது செய்தி

தமிழ்நாடு

முள்ளுப்பாடி மேம்பாலம் பணி நிறைவு இருவழியிலும் வாகனங்கள் அனுமதி

Added : ஜன 12, 2020
Advertisement
 முள்ளுப்பாடி மேம்பாலம் பணி நிறைவு இருவழியிலும் வாகனங்கள் அனுமதி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்வே கேட் மேம்பாலம் பணி நிறைவடைந்து, இரு அரைவட்ட மேம்பாலம் வழியாகவும் நேற்று முதல், வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்வே கேட் மேம்பாலம் பணி, 42 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக, பொள்ளாச்சி - கோவை செல்லும் மேற்கு பகுதியில் அரைவட்ட மேம்பாலம் பணி முடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கோவை - பொள்ளாச்சி நோக்கி செல்லும் கிழக்கு பகுதி அரைவட்ட இரும்பு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வந்தது.இதில், 65 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட அரைவட்ட இரும்பு பாலத்தை ரயில் தண்டவாளம் அமைத்து, கான்கிரீட் துாண்கள் மீது நகர்த்தி வைக்கப்பட்டது.கான்கிரீட் ஓடு தளம் அமைக்கப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்வதற்கான தடுப்பு சுவர் கட்டப்பட்டு பணிகள் நேற்று முன் தினம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து, நேற்று வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், தாமரைக்குளம், எஸ். மேட்டுப்பாளையம் பிரிவில், 'யுடேர்ன்' பகுதிகளில் வைக்கப்பட்ட டிவைடர்கள் அகற்றப்பட்டது.தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் உதயசங்கர் கூறுகையில், ''முள்ளுப்பாடி ரயில்வே கேட் அரைவட்ட இரும்பு மேம்பாலம் பணி நேற்று முன்தினம் முடிக்கப்பட்டது. தற்போது, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X