பொது செய்தி

தமிழ்நாடு

ஆறு ஊராட்சிகளில் மறைமுக தேர்தல்: 13ல் போட்டியில்லை: 13 ஊராட்சிகளில் போட்டியில்லை

Added : ஜன 12, 2020
Advertisement

ஆனைமலை:ஆனைமலை ஒன்றியத்தில், 13 ஊராட்சிகளில், ஊராட்சி துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆறு ஊராட்சிகளில், மறைமுகத்தேர்தல் நடந்தது.ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர்களும், 162 வார்டு உறுப்பினர்களும் உள்ளனர். நேற்று, ஊராட்சி துணைத்தலைவருக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் மறைமுகத்தேர்தல் நடந்தது.இதில், ஆத்துப்பொள்ளாச்சி, கம்பாலபட்டி, பில்சின்னாம்பாளையம், சுப்பேகவுண்டன்புதுார், சோமந்துரை, தாத்துார் ஆகிய, ஆறு ஊராட்சிகளில் மறைமுகத் தேர்தல் நடந்தது. மற்ற, 13 ஊராட்சிகளில், துணைத்தலைவர்களை ஒரு மனதாக தேர்வு செய்ததால், மறைமுகத்தேர்தல் நடக்கவில்லை.செல்லாத ஓட்டுதாத்துார் ஊராட்சியில், ஆறு வார்டுகள் உள்ளன. மறைமுகத்தேர்தலில் ஊராட்சி தலைவர் மற்றும் ஆறு வார்டு உறுப்பினர்கள், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களுக்கு ஓட்டுப்போட்டனர்.அப்போது, ஓட்டுப்பெட்டியை திறந்து எண்ணியதில், ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக இருந்தது.துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்கள், சம ஓட்டுக்கள் பெற்றனர். இதையடுத்து, அதிகாரிகள் ஊராட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு ஒன்றிய அலுவலகம் சென்றனர். அங்கு, குலுக்கல் நடத்தப்பட்டு, வார்டு உறுப்பினர் தர்மராஜ், துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.மாணவி வெற்றிஆத்துப்பொள்ளாச்சி, எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த, கூலித்தொழிலாளி கிட்டான் மகள் சரண்யாகுமாரி,22; முதலாம் ஆண்டு முதுகலை (தமிழ் இலக்கியம்) படித்து வருகிறார்.மாற்றுத்திறனாளியான இவர், எட்டாவது வார்டில் போட்டியிட்டு வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில், ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு, மறைமுக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X