பொது செய்தி

தமிழ்நாடு

மறைமுக தேர்தலில் உறுப்பினர் கடத்தல் புகார்! துணை தலைவர் தேர்தல் கனஜோர்

Added : ஜன 12, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல், பரபரப்புகள், மறைமுக ஒப்பந்தகளுக்கு இடையே நடந்து முடிந்தது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 26 ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர்களில் ஒருவரை, ஊராட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் நடந்த மறைமுக தேர்தலுக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். சில ஊராட்சிகளில், ஒருவர் இரண்டரை ஆண்டுகள், மற்றொருவர் இரண்டரை ஆண்டுகள் துணை தலைவராக பதவி வகிப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் போடுவது, பணம் கொடுத்து எதிரணி வார்டு உறுப்பினர்களை வளைப்பது, எதிரணி உறுப்பினரை ஓட்டெடுப்புக்கு வர விடாமல் தடுத்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு கூத்துகள் அரங்கேறின. இத்தனைக்கும் இடையே, 26 ஊராட்சிகளிலும் தேர்தல் நடந்து, துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.உறுப்பினரை காணலநாயக்கன்பாளையம் ஊராட்சியில் மொத்தம், ஒன்பது வார்டுகள் உள்ளன. நேற்று காலை, மறைமுக தேர்தலில் ஓட்டளிக்க வார்டு உறுப்பினர்கள் வந்த போது, உறுப்பினர் அருள்குமார் மட்டும் வரவில்லை.அவர் சார்ந்த அணியினர் தேடிய போது, அருள்குமாரின் தந்தை, தன் மகன் ஓட்டளிக்க கூடாது என்பதற்காக, யாரோ கடத்தி விட்டனர் என புகார் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.இதனால், அருள்குமாரின் அணியினர் தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.ஆனால், உறுப்பினர் 'கோரம்' இருந்தால், தேர்தல் நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். சில மணி நேர இழுபறிக்கு பின், தேர்தல் நடத்தப்பட்டு நடராஜ் என்பவர் துணைதலைவராக தேர்வு செய்யப்பட்டார். நாயக்கன்பாளையத்தில் தேர்தல் விதிகளை மீறி துணைத்தலைவர் தேர்தல் நடத்தியதாக ஒரு தரப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.மனுவில், விதிகளை மீறி, மறைமுக தேர்தலுக்கு தாமதமாக மதியம், 12:00 மணிக்கு மேல் வந்த ஊராட்சி உறுப்பினர் ஒருவரின் ஓட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தேர்தல் முடிவுகளை அறிவித்தாகவும், அதனால், தேர்தல் செல்லாது என அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X