பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இரு ஒன்றியங்களை கோட்டை விட்டது தி.மு.க.,

Added : ஜன 12, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாவட்டத்தில், இரண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு இருந்தும், தி.மு.க, கோட்டை விட்டது.கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. 12 ஊராட்சி ஒன்றியங்களில், 155 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. 89 இடங்களில் அ.தி.மு.க., கூட்டணியினரும், 55 இடங்களில் தி.மு.க., கூட்டணியினரும், 11 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.மறைமுக தேர்தலில், ஏழு ஒன்றியங்களில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள ஐந்த ஒன்றியங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.* பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 13 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், எட்டு இடங்களில் தி.மு.க.,வினர் வெற்றி பெற்றனர். ஐந்து இடங்களில் மட்டுமே அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற்றிருந்தனர். ஒன்றிய தலைவராக தி.மு.க., வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், தி.மு.க.,வை சேர்ந்த ஒரு கவுன்சிலர் வரவில்லை. இரண்டு கவுன்சிலர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். அதனால், அ.தி.மு.க., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.* இதேபோல், மதுக்கரை ஒன்றியத்தில், மொத்தம், ஆறு வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில், மூன்று பேர் அ.தி.மு.க., மூன்று பேர் தி.மு.க., என, சம அளவில் வெற்றி பெற்றதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், இரு கவுன்சிலர்கள் வரவில்லை. நான்கு பேர் பங்கேற்றாததால், மன்றத்தில் கோரம் இருந்தது. தி.மு.க., சார்பில் போட்டியிடாததால், அ.தி.மு.க., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஒன்றிய குழு துணை தலைவருக்கான போட்டியில், 12 ஒன்றியங்களில், ஆறு இடங்களில் அ.தி.மு.க,, மூன்று இடங்களில் தி.மு.க., மூன்று இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X