கோவை மாவட்ட ஊராட்சி தக்க வைத்தது அ.தி.மு.க.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை மாவட்ட ஊராட்சி தக்க வைத்தது அ.தி.மு.க.,

Added : ஜன 12, 2020
 கோவை மாவட்ட ஊராட்சி  தக்க வைத்தது அ.தி.மு.க.,

கோவை;கோவை மாவட்ட ஊராட்சி தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த சாந்திமதி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில், மொத்தம், 17 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதற்கான தேர்தலில், 12 இடங்களில், அ.தி.மு.க., ஐந்து இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது. அதனால், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள், அ.தி.மு.க.,வுக்கே கிடைக்கும் என்பது உறுதியானது.மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல், கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜாமணி முன்னிலையில் நேற்று நடந்தது. மொத்தமுள்ள, 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில், தி.மு.க., கவுன்சிலர் ராதாவேணியை தவிர, மீதமுள்ள, 16 பேரும் பங்கேற்றனர்.அ.தி.மு.க., வேட்பாளர் சாந்திமதி மட்டும், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அசோகனின் மனைவி.கடந்த, 2011-2016 வரையிலான காலகட்டத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த கனகராஜ், மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்தார். மீண்டும் அ.தி.மு.க.,வே அப்பதவியை தக்க வைத்துள்ளது.மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி, 12 ஓட்டுகள் பெற்று துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் கார்த்திக், நான்கு ஓட்டுகளே பெற்று தோல்வியுற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X