பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 7 ஒன்றியம் தி.மு.க.,வசம்! அ.தி.மு.க., 4, சுயேச்சை 2ல் வெற்றி

Added : ஜன 12, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களில், தி.மு.க.,வினர் - 7, அ.தி.மு.க.,வினர் - 4, சுயேச்சை 2 தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் உள்ள, 13 ஒன்றியங்களில், தாராபுரம், மடத்துக்குளம், மூலனுார், பல்லடம், பொங்கலுார், உடுமலை, ஊத்துக்குளி ஒன்றிய தலைவர் பதவிகளை, தி.மு.க., கைப்பற்றியுள்ளது.
திருப்பூர், குடிமங்கலம், அவிநாசி, வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் பதவியை அ.தி.மு.க.,வும், காங்கயம், குண்டடம் தலைவர் பதவிகளை சுயே., கவுன்சிலர்களும் கைப்பற்றியுள்ளனர்.ஒன்றிய துணை தலைவர்தாராபுரம், மடத்துக்குளம், மூலனுார், பல்லடம், பொங்கலுார், உடுமலை ஒன்றிய துணை தலைவர் பதவியை, தி.மு.க., வென்றுள்ளது. குடிமங்கலம், குண்டடம், ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஒன்றிய துணை தலைவர் பதவிகளை, அ.தி.மு.க.,வும், அவிநாசியை தே.மு.தி.க.,வும், காங்கயம், திருப்பூர் ஒன்றிய துணை தலைவர் பதவிகளை, சுயே., கவுன்சிலர்களும் கைப்பற்றியுள்ளனர்.குண்டடம், ஊத்துக்குளி, திருப்பூர் ஒன்றியங்களில் மட்டும் துணை தலைவர் பதவிக்கு போட்டி நடந்தது; மற்ற ஒன்றியங்களில் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X