தேவநீதிதாசை ஆணையராக்க முயற்சிக்கவில்லை:நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (16)
Advertisement
தேவநீதிதாசை ஆணையராக்க முயற்சிக்கவில்லை:நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி

இந்த செய்தியை கேட்க

புதுச்சேரி: புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க உத்தரவிட கவர்னர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை, அதற்கான கோப்பை கவர்னர் தடுத்து நிறுத்திவிட்டார்.

இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றும், தனது ஆலோசகரும், கவர்னர் மாளிகை சிறப்பு அதிகாரியுமான தேவநீதிதாசை தேர்தல் ஆணையராக்க கவர்னர் முயற்சி செய்கிறார் என்றும், முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.





இதற்கு மறுப்பு தெரிவித்து, கவர்னர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்அதில், ' முதல்வர் நாராயணாமி, தேர்தல் ஆணையர் நியமனம் மற்றும் அரிசி வழங்குவது தொடர்பாக மீண்டும், மீண்டும் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி, மக்களை தவறாக வழிநடத்த பார்க்காதீர், கவர்னர் மாளிகையில் நான் இருக்கும் வரையில் தேவநீதிதாஸ் நீடிப்பார். அவரது அனுபவம், ஒழுக்கம், மக்களுக்கான சேவை கவர்னர் மாளிகைக்கு தேவைப்படுகிறது. அவரது தனிப்பட்ட ஆலோசனைகள் பயனுள்ளதாக உள்ளது.

தாங்கள் நினைப்பது போல் அவர் எந்த பதவிக்கும் வர விரும்பவில்லை. எனவே, தாங்கள் அடிக்கடி பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதால் மக்களுக்கு தங்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிடும். முதல்வர் அலுவலக கன்னியத்தை காப்பாற்றுங்கள். தேர்தல் ஆணையர் நியமனம் மற்றும் இலவச அரிசி தொடர்பாக பிரச்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி எந்தகருத்தும் நான் தெரிவிக்க விரும்பவி்ல்லை'.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
13-ஜன-202000:19:59 IST Report Abuse
Nallavan Nallavan வடிவேலு அண்ணன் மாதிரி இருக்குற இவன் எதுக்கும் அசராத திருடன் .....
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
12-ஜன-202020:02:11 IST Report Abuse
natarajan s அரிசி வாங்கினால் கமிஷன் கிடைக்கும், தரமில்லாத அரிசியை கொடுக்கலாம், அதிகம் பணம் கொடுத்து வாங்கியதாக கணக்கு காட்டலாம், பணமாக கொடுத்தால் இதெல்லாம் செய்ய முடியாதே அந்த ஆதங்கம்தான் இவருக்கு, இவரது உள்நோக்கம் தெரிந்துதான் ஆளுநர் பணமாக கொடுங்கள் மக்கள் நல்ல அரிசியை வாங்கி கொள்ளட்டும் என்று கூறுகிறார் , ஆடிய காலும், அரிப்பெடுத்த கையும் சும்மா இருக்காதே அதுதான் பிரச்சினை.
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
12-ஜன-202020:00:59 IST Report Abuse
Tamilselvan ஊழல்வாதி இந்த நாராயன சாமி . ஊழல் செய்ய முடிய வில்லை என்று தினமும் புலம்புகிறார். அவரது சொந்த கட்சி காரர் பெரிய உள்ள பட்டியல் கொடுத்து இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X