பொது செய்தி

தமிழ்நாடு

கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் தேர்வு ஒத்திவைப்பு: அ.தி.மு.க., ஆதரவு கவுன்சிலர்கள் 8 பேர் 'ஆப்சென்ட்'

Added : ஜன 12, 2020
Advertisement

மேட்டூர்: கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் தேர்வுக்கு, அ.தி.மு.க., ஆதரவு கவுன்சிலர்கள் எட்டு பேரும் வராததால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், கொளத்தூரில், அ.தி.மு.க., - பா.ம.க., தலா, 3, தி.மு.க., 4, சுயேச்சைகள் இருவர் என, ஒன்றிய கவுன்சிலர், 12 பேர் உள்ளனர். ஒன்றிய குழு தலைவர் பதவி எஸ்.சி.,(பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்பிரிவில், தி.மு.க.,வில், பழனியப்பன், புவனேஸ்வரி என, இரு கவுன்சிலர் உள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில், எஸ்.சி., கவுன்சிலர் இல்லை. இதனால், சுயேச்சைகள் ஆதரவுடன், அ.தி.மு.க., கூட்டணியில், 8 கவுன்சிலர்கள் என, பெரும்பான்மை இருந்தும், தலைவர் பதவியை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஒன்றிய குழு தலைவர் தேர்வு கூட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு நடந்தது. ஆனால், தலைவரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்தது. அத்துடன், அசம்பாவிதத்தை தடுக்க, டி.எஸ்.பி., சவுந்தரராஜன் தலைமையில், 80க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க., கவுன்சிலர்கள் பழனியப்பன், கனிலா, சுருதி, புவனேஸ்வரி ஆகியோருடன், மேற்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் வந்தார். அந்த கவுன்சிலர்களை, மொபைல் போனுடன் செல்ல, போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், போலீசார் அனுமதிக்கவில்லை. பின், நான்கு கவுன்சிலர் மட்டும், போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நிருபர்கள், கட்சியினர் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் அ.தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த எட்டு கவுன்சிலர்கள், கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். 4 பேர் மட்டும் பங்கேற்று, கூட்டம் முடிந்ததால், காலை, 11:40 மணிக்கு, அவர்கள் வெளியேறினர்.

இதுகுறித்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுசீலாராணி கூறுகையில், ''பெரும்பான்மை கவுன்சிலர்கள் பங்கேற்காததால் கோரம் இல்லை; தலைவர் தேர்வு செய்வதற்கான கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் தேர்வு, இன்று(நேற்று), மதியம், 3:30 மணிக்கு நடக்கும்,'' என்றார்.

துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு: மதியம், துணைத் தலைவர் தேர்வு கூட்டம் நடந்தது. அதில், அ.தி.மு.க.,- பா.ம.க., சுயேச்சை கவுன்சிலர், 8 பேர் பங்கேற்றனர். பெரும்பான்மை கவுன்சிலர் ஆதரவு தெரிவித்ததால், பா.ம.க., கவுன்சிலர் மாரப்பன், கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவராக, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X