பொது செய்தி

தமிழ்நாடு

19 ஊராட்சியில் து.தலைவர் தேர்தல் நிறுத்தம்

Added : ஜன 12, 2020
Advertisement

சேலம்: துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள, 19 ஊராட்சிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் எண்ணிக்கை, 3,597. அதில், போட்டியின்றி, 392 பேர் தேர்வானவர் போக, 3,205 பேர், தேர்தல் மூலம் வெற்றி பெற்றனர். அவர்களில், 3,584 பேர், கடந்த, 6ல் பதவியேற்றனர். மீதமுள்ள, 13 பேர், அடுத்தடுத்து, நேற்று வரை பதவியேற்றனர். தொடர்ந்து, ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல், அந்தந்த ஊராட்சிகளில், நேற்று மாலை, 3:30 மணிக்கு, தனித்தனியே நடந்தது. 385 ஊராட்சிக்கு தலா ஒருவர் வீதம், தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படி, 3,578 ஊராட்சிகளில், துணைத்தலைவர்கள் பதவியேற்றனர். தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள, 19 ஊராட்சிகள் விபரம்: மஜ்ரா கொல்லப்பட்டி, கல்பாரப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, வெள்ளாளகுண்டம், சின்னமநாயக்கன்பாளையம், குறிச்சி, புழுதிக்குட்டை, சிங்கிபுரம், களரம்பட்டி, பனமடல், தாண்டானூர், தும்பல், பழனியாபுரி, தென்னம்பிள்ளையூர், கருங்கல்லூர், சாணாரப்பட்டி, ஆவடத்தூர், வீராச்சிப்பாளையம், செட்டிமாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில், துணைத்தலைவர் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X