பொது செய்தி

தமிழ்நாடு

பெண் கவுன்சிலர் கடத்தல் புகார்: ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

ஓமலூர்: பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டதாக, போலீசில் புகாரளிக்கப்பட்டதால், தாரமங்கலம் ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில், பா.ம.க.,- தி.மு.க., தலா நான்கு, அ.தி.மு.க., சுயேச்சை தலா இரண்டு, தே.மு.தி.க., ஒன்று என, ஒன்றிய கவுன்சிலர், 13 பேர் உள்ளனர். இதில், 'சுயேச்சையான, 1வது வார்டு கவுன்சிலர் ஜானகி, கடந்த, 9ல் கடத்தப்பட்டார்' என, அவரது மாமனார் அன்னமுத்து, நேற்று முன்தினம், தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். இந்நிலையில், பி.டி.ஓ., அலுவலகத்தில், ஒன்றிய குழு தலைவர், அதன் துணைத்தலைவர் தேர்தலை நடத்தும் பணி தொடங்கியது. அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் வந்த சற்று நேரத்தில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஜானகி, யாருக்கும் ஓட்டுப்போடவில்லை எனக்கூறி, அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது, அலுவலகம் முன், பல்வேறு கட்சியினர் குவிந்திருந்தனர். இதனால், சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் என கருதி, ஏ.டி.எஸ்.பி., சுரேஷ்குமார், ஓமலூர் டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் போலீசார், அதிவிரைவு படை போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், தேர்தல் அலுவலர் பண்டரிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஜானகி கடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. அதனால், ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடத்துவதில், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அத்தேர்தலை, ஒத்திவைப்பதாக அறிவித்து, அதற்கான அறிவிப்பை, பலகையில் ஒட்டினார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X