பொது செய்தி

தமிழ்நாடு

தீவிர ஆலோசனையில் தி.மு.க.,வினர் மூழ்கியதால் பெரும்பான்மை இருந்தும் 'வடை' போச்சு...

Added : ஜன 12, 2020
Advertisement

ஏற்காடு: தலைச்சோலையில், தீவிர ஆலோசனையில் தி.மு.க.,வினர் மூழ்கியதால், தேர்தல் அலுவலர், இருப்பவர்களை வைத்து தேர்தல் நடத்தினார். இதில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர், துணைத்தலைவர் பதவியை போட்டியின்றி கைப்பற்றினார்.
ஏற்காடு, தலைச்சோலை ஊராட்சியில், தி.மு.க., 6, அ.தி.மு.க., 2, பா.ஜ.,வின் ஒரு கவுன்சிலர்கள் உள்ளனர். நேற்று, தி.மு.க.,வினர் தங்களுக்குள் யார் துணைத்தலைவராவது என, அருகிலுள்ள வி.ஆர்.ஓ., பகுதியில் முகாமிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள், மதியம், 12:30 மணி வரை, ஊராட்சி அலுவலகத்துக்கு வரவில்லை. இதனால், பி.டி.ஓ. ராமசந்தர், 4 கவுன்சிலர், ஒரு ஊராட்சி தலைவரை வைத்து, தேர்தல் நடத்தினார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தேவகி மனுதாக்கல் செய்தார். மற்றவர்கள் மனுதாக்கல் செய்யாததால், அவர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான பின், தி.மு.க., கவுன்சிலர் ராஜா, மனுதாக்கல் செய்வதாக கூறினார். அதற்கான நேரம் முடிந்ததால், தேர்தல் அலுவலர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால், பெரும்பான்மை இருந்தும், துணைத்தலைவர் பதவியை, தி.மு.க.,வினர் கோட்டை விட்டனர்.

மற்ற ஊராட்சிகளில்...: ஏற்காடு டவுன் ஊராட்சி துணைத்தலைவர் - பாலு, நாகலூர் - குப்புசாமி, செம்ம நத்தம் - சிவமூர்த்தி, மஞ்சக்குட்டை - சரவணகுமார், வெள்ளக்கடை - கரியமலச்சி, வேலூர் - சித்தையன், வாழவந்தி - குப்புசாமி, மாரமங்கலம் ஊராட்சி துணைத்தலைவராக மலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X