பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய துணைத்தலைவர் பதவி 'அம்போ': தலையெழுத்தை மாற்றியது கையெழுத்து

Added : ஜன 12, 2020
Advertisement

கெங்கவல்லி: துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருக்கு, முன்மொழிபவர் இடத்தில் கையெழுத்திடுவதற்கு பதில், வேட்பாளர் பெயரிடத்தில், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் கையெழுத்திட்டார். இதனால், அவர்களின் வேட்புமனுவை, தேர்தல் அதிகாரிகள் நிராகரிக்க, அ.தி.மு.க., கவுன்சிலர் போட்டியின்றி தேர்வானார். கெங்கவல்லியில், அ.தி.மு.க., - தி.மு.க., தலா, 5, சுயேச்சை - 1 என, ஒன்றிய கவுன்சிலர்கள், 11 பேர் உள்ளனர். நேற்று, தேர்தல் அலுவலர்கள் ராஜேந்திரன், செந்தில் ஆகியோர், ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தினர்.
ஒரு ஓட்டில்...: அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, 2வது வார்டு கவுன்சிலர் ப்ரியா, ஆறு ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., சார்பில், கியூ பிரிவு போலீஸ் ராமச்சந்திரனின் மனைவியான, எட்டாவது வார்டு கவுன்சிலர் கோமதி போட்டியிட்டு, ஐந்து ஓட்டு பெற்று தோல்வியடைந்தார். துணைத்தலைவர் தேர்தலின்போது, அ.தி.மு.க., சார்பில், 7வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் விஜயேந்திரன் போட்டியிட்டார். தி.மு.க., சார்பில், முதலாவது வார்டு சுசீலா போட்டியிட, வேட்பு மனு வழங்கினார். அதில், முன்மொழிபவர் இடத்தில், 11வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் கையெழுத்து போடாமல், போட்டியிடும் வேட்பாளர் இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டார். இதனால், சுசீலா மனுவை, தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். விஜயேந்திரன், துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X