பொது செய்தி

தமிழ்நாடு

தலைவர், துணைத்தலைவர் பதவி: அ.தி.மு.க.,வினர் ஒருமனதாக தேர்வு

Added : ஜன 12, 2020
Advertisement

ஓமலூர்: காடையாம்பட்டியில், ஒன்றிய கவுன்சிலர், 19 பேர் உள்ளனர். நேற்று, பி.டி.ஓ., அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் கருணாநிதி தலைமையில், ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் மாரியம்மாள், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், துணைத்தலைவராக, அ.தி.மு.க.,வின், 14வது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். அவர்களுக்கு, ஓமலூர் எம்.எல்.ஏ., வெற்றிவேல், அ.தி.மு.க., புறநகர் கட்சி அலுவலகத்தில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் எம்,எல்.ஏ., பல்பாக்கி கிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர். நங்கவள்ளியில், 11வது வார்டு கவுன்சிலர் பானுமதி, தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக சண்முகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X