தமிழ்நாடு

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவி: பா.ம.க., பெண் நிர்வாகிக்கு மகுடம்

Added : ஜன 12, 2020
Advertisement

சேலம்: மாவட்ட ஊராட்சி குழு தலைவராக, பா.ம.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட மகளிரணி துணை செயலர் வெற்றி பெற்றார்.
சேலம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மறைமுக தேர்தல், நாட்டாண்மை கழக கட்டடம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன், தேர்தலை நடத்தினார். மாவட்ட கவுன்சிலர், 29ல், 26 பேர் பங்கேற்றனர். அதில், அ.தி.மு.க., 16, பா.ம.க., - 4, தே.மு.தி.க., - 1 என, அக்கூட்டணியில், 21 பேர், தி.மு.க., தரப்பில் ஐந்து பேர் அடங்கும். தலைவர் பதவிக்கு, 3வது வார்டு உறுப்பினரான, பா.ம.க.,வைச் சேர்ந்த ரேவதி, 26வது வார்டு உறுப்பினர், தி.மு.க.,வைச் சேர்ந்த நல்லம்மாள் போட்டியிட மனுதாக்கல் செய்தனர். கவுன்சிலர், 26 பேரிடம், ஓட்டுச்சீட்டு வழங்கி, ரகசிய ஓட்டுப்பதிவு நடந்தது. அதன் முடிவை, ராமன் வெளியிட்டார். அதில், ரேவதி, 22 ஓட்டுகள் பெற்று, மாவட்ட ஊராட்சி குழு தலைவரானார். நல்லம்மாளுக்கு, நான்கு ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் ரேவதி அளித்த பேட்டி: குடிநீர், சாலை, சுகாதாரம், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். பொதுமக்கள், எப்போது, வேண்டுமானாலும், என்னை, நேரில் சந்தித்து, குறை, கோரிக்கைகளை தெரிவிக்கலாம். அதிகாரிகள் ஒத்துழைப்புடன், உடனடியாக பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். மருத்துவர் ராமதாஸ், முதல்வர் பழனிசாமி ஆகியோர் வழிகாட்டுதல்படி, மக்களை பணிகளை செவ்வனே செய்து முடிப்பேன் என்றார்.

அ.தி.மு.க., கவுன்சிலர் துணைத் தலைவர்: மதியம், துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. தலைவர் உள்பட, 29 பேரில், 27 பேர் பங்கேற்றனர். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, 12வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன், 19வது வார்டு கவுன்சிலர், தி.மு.க.,வை சேர்ந்த கீதா போட்டியிட்டனர். ராஜேந்திரன், 22 ஓட்டுகள் பெற்று வென்றார். கீதா, ஐந்து ஓட்டுகள் மட்டும் பெற்றார். தி.மு.க., தரப்பில், ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் அழகிரி, அ.தி.மு.க.,வின், 29வது வார்டு கவுன்சிலர் ராஜா, ரகசிய ஓட்டுப்பதிவில் பங்கேற்கவில்லை.

தி.மு.க.,வில் கறுப்பு ஆடு! மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தலில் ஓட்டுப்போட, ஒன்பதாவது வார்டு கவுன்சிலரான, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, 29வது வார்டு கவுன்சிலரான, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா ஆகியோர் வரவில்லை. மற்றொரு, அ.தி.மு.க., கவுன்சிலரான, 11வது வார்டு சின்னுசாமி, ஓட்டுப்பதிவு முடிந்த பின் வந்தார். அத்துடன், அ.தி.மு.க., கூட்டணியில், 21 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆனால், அக்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்ட ரேவதி, 22 ஓட்டுகள் பெற்று, 18 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில், தி.மு.க., தரப்பில், ஐந்து கவுன்சிலர் பங்கேற்றாலும், அக்கட்சிக்கு நான்கு ஓட்டுகள் மட்டுமே பதிவாகி இருந்தன. ஒரு தி.மு.க., ஓட்டு, இடம்மாறி, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளித்து, அதன் வெற்றிக்கு மெருகேற்றியது. இதனால், தி.மு.க.,வினர், அந்த 'கறுப்பு ஆடு' யாரென கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர்.

வெற்றி பெற்றவர் விபரம்: ரேவதி, 31, பி.ஏ., பி.எட்., பட்டதாரி. 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், பா.ம.க.,வில், சேலம் மேற்கு மாவட்ட மகளிரணி துணை செயலராக உள்ளார். அவருக்கு, மகள் சவுதன்யா, 12, மகன் சவுதன்குமரன், 10, உள்ளனர். மேட்டூர், கோனூர் கிராமம், மூலக்கடை, குஞ்சாண்டியூரில் வசிக்கும், அவரை தொடர்பு கொள்ள, 82480 - 80832, 97516 - 63662, 63 என்ற மொபைல் எண்களில் அழைக்கலாம். இவரது கணவர் ராஜசேகர், 39. எம்.பி.ஏ., பட்ட தாரி. குஞ்சாண்டியூரில், 'ஸ்கிரீம் மார்ட் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்' நடத்துகிறார். தனியார் பள்ளி பங்குதாரராகவும் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X