பொது செய்தி

தமிழ்நாடு

தேர்ந்தெடுத்தபின் ஒத்திவைப்பு: முற்றுகையால் மீண்டும் அறிவிப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

சங்ககிரி: சங்ககிரி, கோட்டவரதம்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல், நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடாஜலபதி செயல்பட்டார். அங்கு, மூன்றாவது வார்டு கவுன்சிலரான, தி.மு.க., கூட்டணி கட்சியான, கொ.ம.தே.க.,வைச் சேர்ந்த சசிகலா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்தெடுத்தப்பட்டதாக அறிவித்து, காலை, 11:00 மணிக்கு, அதற்கான நோட்டீஸை, ஊராட்சி அலுவலகம் வெளியே, வெங்கடாஜலபதி ஒட்டினார். சற்று நேரத்தில், நோட்டீஸ் கிழிக்கப்பட்டு, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக, வெங்கடாஜலபதி, மீண்டும் ஒரு நோட்டீஸ் ஒட்டினார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர், ஒன்றிய செயலர் ராஜேஸ் தலைமையில், அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பின், சசிகலா துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X