பொது செய்தி

தமிழ்நாடு

துணைத்தலைவர் தேர்வு கருங்கல்லூரில் ஒத்திவைப்பு

Added : ஜன 12, 2020
Share
Advertisement

கொளத்தூர்: கொளத்தூரில், கருங்கல்லூர் தவிர, இதர ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். கொளத்தூரில், 14 ஊராட்சிகள் உள்ளன. அதில், கருங்கல்லூரில், 12 கவுன்சிலர்கள் உள்ளனர். நேற்று நடந்த துணைத்தலைவர் தேர்வு கூட்டத்தில், 10 பேர் பங்கேற்றனர். அதில், அமராவதியை தேர்வு செய்யவிருந்த நிலையில், மற்றொருவருக்கு ஆதரவாக, 4 பேர் வெளியேறி விட்டனர். இதனால், பெரும்பான்மை இல்லாததால், துணைத் தலைவர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதுதவிர, இதர, 13 ஊராட்சிகளில், தேர்வு செய்யப்பட்ட துணைத் தலைவர்கள் விபரம்: மூலக்காடு - விஜயா, சாம்பள்ளி - அந்தோணியம்மாள், காவேரிபுரம் - சரவணன், லக்கம்பட்டி - நதியா, நவப்பட்டி - முருகேசன், ஆலமரத்துப்பட்டி - ராஜாமணி, பண்ணவாடி - மகேந்திரன், சித்திரப்பட்டி புதூர் - சுந்தரராஜன், கண்ணாமூச்சி -சேகர், கோல்நாயக்கன்பட்டி - சித்ரா, தின்னப்பட்டி - கண்ணன், சிங்கிரிப்பட்டி - சென்னகிருஷ்ணன், பாலமலை - சித்தாயி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X