பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன மீனை போட்டு... பெரிய மீனை பிடித்த அ.தி.மு.க.,

Added : ஜன 12, 2020
Advertisement

ஏற்காடு: சின்ன மீனை பிடித்து, பெரிய மீனை பிடிக்க வேண்டும் என்ற கதையாக, தி.மு.க.,வினருக்கு துணைத்தலைவர் பதவியை வழங்கி, தலைவர் பதவியை, போட்டியின்றி அ.தி.மு.க., கைப்பற்றியது.
ஏற்காட்டில், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆறு பேரில், அ.தி.மு.க., - தி.மு.க.,வில், தலா மூவர் உள்ளனர். இதனால், ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு, இரு கட்சியினரிடமும் பெரும்பான்மை இல்லை. நேற்று, அப்பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சாந்தாவள்ளி அண்ணாதுரை போட்டியிட்டார். ஆனால், சமபலம் இருந்தும், தி.மு.க., சார்பில் யாரும் போட்டியிடவில்லை. இதனால், சாந்தாவள்ளி அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவராக, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த துணைத்தலைவர் தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த சேகர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக யாரும் போட்டியிடாததால், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சமபலம் இருந்தும், தி.மு.க.,வினர் தலைவர் பதவியை தாரைவார்த்தது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
போட்டியின்றி தேர்வு: சங்ககிரியில், 14 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். அதில், அ.தி.மு.க., 7, பா.ம.க., 3, தி.மு.க., 4 பேர் அடங்கும். ஒன்றிய குழு தலைவர் பதவி தேர்தல், நேற்று நடந்தது. அதில், 14வது வார்டு கவுன்சிலரான, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மகேஸ்வரி போட்டியிட்டார். அவரை எதிர்த்து, யாரும் மனுதாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மதியம், துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. அதில், 2வது வார்டு கவுன்சிலரான, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிவக்குமாரன் போட்டியிட்டார். எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இருவருக்கும், தமிழக முதல்வர் பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ், பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, வெங்கடேஷ் காலில் விழுந்து, இருவரும் ஆசிபெற்றனர். ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலில், தி.மு.க.வைச் சேர்ந்த, நான்கு கவுன்சிலர்களும் பங்கேற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X