பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் அ.தி.மு.க., கவுன்சிலர் வெற்றி

Added : ஜன 12, 2020
Advertisement

ஆத்தூர்: ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர் வெற்றி பெற்றார். தே.மு.தி.க., கவுன்சிலர், துணைத் தலைவராக, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆத்தூரில், அ.தி.மு.க., 4, தே.மு.தி.க., 2, பா.ம.க., சுயேச்சை தலா, 1, தி.மு.க., 6 என, ஒன்றிய கவுன்சிலர், 14 பேர் உள்ளனர். நேற்று, ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, 11வது வார்டு கவுன்சிலர் லிங்கம்மாள், எட்டு ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். தி.மு.க., சார்பில், அக்கட்சி ஒன்றிய செயலர் செழியனின் மனைவி பத்மினி பிரியதர்ஷினி, ஆறு ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். துணைத்தலைவர் தேர்தலில், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் கன்னியப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.வாக்குவாதம்: ஒன்றிய குழு தலைவர் தேர்தலின்போது, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் ரஞ்சித்குமார், தே.மு.தி.க., மாவட்ட செயலர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஒன்றிய அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தி.மு.க., நிர்வாகிகளை அனுமதிக்காததால், பெண் கவுன்சிலரின் கணவர்கள், 'தங்கள் மனைவிக்கு பாதுகாப்பு இல்லை; தங்களையும் அனுமதிக்க வேண்டும்' என, டி.எஸ்.பி., ராஜூ உள்ளிட்ட போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, தடுப்பு கட்டைகளை அகற்றி, உள்ளே செல்ல முயன்ற தி.மு.க.,வினரை, 20க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, தேர்தல் முடிந்து வெளியே வந்த பத்மினிபிரியதர்ஷினி, 'கட்சியினர் அமைதியாக செல்லுங்கள்' எனக்கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X