பொது செய்தி

தமிழ்நாடு

பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்

Added : ஜன 12, 2020
Advertisement

வீரபாண்டி: தைப்பொங்கலில் முருகனை தரிசிக்க, 49ம் ஆண்டாக, பழநிக்கு, ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரையை தொடங்கினர்.
தைப்பொங்கல் திருநாளில், தமிழர் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் முதன்மையான பழநிக்கு பாதயாத்திரையாக சென்று தரிசிக்க, மாநிலம் முழுவதுமிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வர். அதன்படி, சேலம் மாவட்டம், பூலாவரி, அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், 'திருமுருகன் திருச்சபை' எனும் பாதயாத்திரை குழு அமைத்து, 49 ஆண்டாக , பழநிக்கு பாதயாத்திரை சென்றுவருகின்றனர். நடப்பாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, அச்சபையினர், நேற்று, பாதயாத்திரையை தொடங்கினர். இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 200 பேர் பங்கேற்றனர். அவர்கள், 'கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, எங்களை காப்பாய் வேல்முருகா' என, கோஷம் எழுப்பியபடி சென்றனர். முன்னதாக, மாலையணிந்து விரதமிருந்த பக்தர்கள், நேற்று காலை, பூலாவரியிலிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக, உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலுக்கு வந்து, சிறப்பு பூஜை செய்து, பாதயாத்திரை பயணத்தை தொடங்கினர். இவர்கள், பொங்கல் திருநாள் காலை, பழநிக்கு போய் சேர்ந்து, சிறப்பு பூஜையை முடித்துக்கொண்டு திரும்புவர். பக்தர்கள் கூறுகையில், 'ஆண்டு தொடக்கத்தில், பாதயாத்திரை சென்று முருகனை வழிபடுவதால், மகிழ்ச்சி, வெற்றி குவியும் என்ற நம்பிக்கையில், ஆண்டுதோறும் பாதயாத்திரை செல்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X