வாழப்பாடி: சிங்கிபுரம், சின்னமநாயக்கன்பாளையத்தில், துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், அலுவலர்களை, தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர்.
வாழப்பாடியில், 20ல், 16 ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்வு, நேற்று நடந்தது. அதில், கோலாத்துக்கோம்பை துணைத்தலைவராக ஈஸ்வரன், அத்தனூர்பட்டி - ராமச்சந்திரன், சந்திரபிள்ளைவலசு - இளையராஜா, நீர்முள்ளிக்குட்டை - செல்வி, துக்கியாம்பாளையம் - தேன்மொழி, மன்னார்பாளையம் - அருண், சோமம்பட்டி - கதிரேசன், விலாரிபாளையம் - மகாலட்சுமி, குமாரபாளையம் - சசிகுமார், தேக்கல்பட்டி - லட்சுமி, திருமனூர் - பழனிசாமி, வேப்பிலைப்பட்டி - மணி, காட்டுவேப்பிலைப்பட்டி - சரவணன், மன்னாயக்கன்பட்டி - பச்சியம்மாள், முத்தம்பட்டி - ரேவதி, பொன்னாரம்பட்டி - கலாதேவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சின்னமநாயக்கன்பாளையம், குறிச்சி, புழுதிக்குட்டை, சிங்கிபுரம் ஊராட்சிகளில், நடைமுறை சிக்கலால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு தி.மு.க., அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, சிங்கிபுரம், சின்னமநாயக்கன்பாளையத்தில், ஊராட்சி அலுவலகத்திலிருந்து தேர்தல் அலுவலர்களை வெளியேற விடாமல், தி.மு.க.,வினர் முற்றுகையிட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின், வாழப்பாடி போலீசார், தேர்தல் அதிகாரிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE