சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க., பிரமுகர் தோல்வி: ஆத்திரத்தில் ஓட்டுச்சீட்டை கிழித்ததால் பரபரப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

வீரபாண்டி: வீரபாண்டி ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில், தி.மு.க., பிரமுகர் தோல்வியடைந்தார். இதனால், தேர்தல் அலுவலரிடமிருந்து, ஓட்டுச்சீட்டுகளை பிடுங்கி, கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு, தி.மு.க.,வைச் சேர்ந்த, கோகிலா, வெங்கடாஜலம் போட்டியிட்டனர். அங்கு, ஒன்பது கவுன்சிலர்கள் உள்ளனர். அதில், தி.மு.க., 5, அ.தி.மு.க., 3, சுயேச்சை ஒருவர் அடங்குவர். அனைவரும், நேற்று ஓட்டுப்போட்டனர். பின், அவர்களை தனியறையில் அமரவைத்துவிட்டு, எண்ணிக்கையின்போது வரவழைக்கப்பட்டனர். முடிவில், கோகிலா ஆறு, வெங்கடாஜலம், 3 ஓட்டுகள் பெற்றதாக, உதவி தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் அறிவித்து, 'மினிட்' புத்தகத்தில் எழுத முயன்றார். அப்போது வெங்கடாஜலம், 'தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது' எனக்கூறி, ஓட்டுச்சீட்டுகளை, அலுவலரிடமிருந்து பறித்து, கிழித்து வீசி விட்டு வெளியேறினார். இதனால், நான்கு மணி நேரத்துக்கு பின், கோகிலா, துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து, வெங்கடாஜலம் மீது, போலீசில் புகாரளிக்கவுள்ளதாக, ராஜேந்திரன் தெரிவித்தார்.

ஒத்திவைப்பு: கல்பாரப்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில், ஒன்பது கவுன்சிலர்களில், மூன்று பேர் மட்டும் வந்தனர். மற்றவர்கள் வராததால், ஓட்டுப்பதிவுக்கு பெரும்பான்மை இல்லை எனக்கூறி, தேதி குறிப்பிடாமல், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X