பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பஞ்., தலைவராக நவமணி தேர்வு: பா.ம.க., வேலுசாமி துணை தலைவரானார்

Added : ஜன 12, 2020
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்ட பஞ்., தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த நவமணி தேர்வு செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கான, 19 பதவியில், அ.தி.மு.க., கூட்டணி, 14 இடம், தி.மு.க., கூட்டணி ஐந்து இடங்களை பிடித்தன. மாவட்ட பஞ்., தலைவருக்கான மறைமுக தேர்தல், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. ஒவ்வொரு கவுன்சிலர்களாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆறாவது வார்டு கவுன்சிலரான அ.தி.மு.க.,வை சேர்ந்த நவமணி, 54, தலைவராக மனுதாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து, தலைவராக தேர்வானதாக கலெக்டர் கதிரவன் அறிவிப்பு செய்து, சான்று வழங்கினார். மாவட்ட பஞ்., தலைவர் அலுவலகத்தில் பதவியேற்றார். சத்தியமங்கலம் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கந்த சாமியின் மனைவியான நவமணி, டி.என்.பாளையம் அருகே, கவுண்டம்பாளையத்தில் வசிக்கின்றார். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். மதியம் நடந்த துணைத் தலைவர் தேர்தலில், பா.ம.க.,வை சேர்ந்த ஐந்தாவது வார்டு கவுன்சிலர் வேலுசாமி, 47, மனுத்தாக்கல் செய்து, போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவர், அம்மாபேட்டை அருகே ஆனந்தம்பாளையத்தில் வசிக்கிறார். இவர் எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X