பொது செய்தி

தமிழ்நாடு

குலுக்கல் முறையில் பஞ்., துணைதலைவர் தேர்வு: எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், ஆர்ப்பாட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement

பவானி: பவானி யூனியன், பருவாச்சி பஞ்சாயத்தில், துணை தலைவரை தேர்ந்தெடுக்க, மறைமுக தேர்தல் பஞ்., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆறாவது வார்டு உறுப்பினர் சுப்பிரமணி, இரண்டாவது வார்டு உறுப்பினர் அய்யண்ணன் போட்டியிட்டனர். இருவரும் ஐந்து ஓட்டுகள் பெற்றதால், தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி, குலுக்கல் முறையை கடைப்பிடித்தார். இதில் சுப்பிரமணி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அய்யண்ணனின் ஆதரவாளர்கள் ஏற்காமல், முறைகேடு நடந்ததாக கூறி, பஞ்., அலுவலகம் முன், பவானி - அந்தியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பவானி டி.எஸ்.பி., சேகர், அந்தியூர் போலீசார், அதிகாரி களிடம் பேசி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியதால், மறியலை கைவிட்டனர். இதை தொடர்ந்து, தேர்தல் ரத்து கோரிக்கையை, மீண்டும் அவர்கள் முன்வைத்தனர். இதை அவர் ஏற்காததால், அதே பகுதியில் இருந்த மொபைல்போன் டவரில், அய்யண்ணன் ஆதரவாளர்கள் ஐந்து பேர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இறங்கினர். இதையடுத்து மூன்றாவது வார்டு மாரியம்மா, நான்காவது வார்டு ஜெயந்தி, ஏழாவது வார்டு சரஸ்வதி, எட்டாவது வார்டு பூங்கொடி ஆகியோருடன், அய்யண்ணன் சேர்ந்து கொண்டு, கலெக்டரிடம் சென்று, வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். இந்த கலாட்டாக்களால், பருவாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X