தமிழ்நாடு

பாய வேண்டிய இடத்திலும் பதுங்கும் பரிதாபம்: தி.மு.க.,வுக்கு என்னாச்சு; தொண்டர்கள் ஆவேசம்

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னிமலை: பெருந்துறை சேர்மன் பதவிக்கு, பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்த்த நிலையில், அ.தி.மு.க.,வினர் அலேக்காக கைப்பற்றினர். தி.மு.க., பயந்து ஒதுங்கியதே காரணம் என்று, அக்கட்சியில் குமுறல் எழுந்துள்ளது.
பெருந்துறை யூனியனில், 12 வார்டுகளில், ஐந்து வார்டுகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. மூன்றில் தி.மு.க., வும், நான்கில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சுயேச்சைகளின் ஆதரவுடன், யூனியன் தலைவர் பதவியை, தி.மு.க., கைப்பற்றும் என, அ.தி.மு.க.,வினரின் ஒரு தரப்பிலேயே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர்கள் மட்டுமின்றி, சொந்த கட்சியினருக்கும் அதிர்ச்சி தந்து, போட்டியிடாமல், தி.மு.க., ஒதுங்கி கொண்டதால், அ.தி.மு.க.,வை சேர்ந்த சாந்தி சேர்மேனாகவும், துணை தலைவராக மகேஸ்வரனும் தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க..,வின் இந்த முடிவு, மேல்மட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி, தொண்டர்கள் மத்தியில் பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி.மு.க., தொண்டர்கள் கூறியதாவது: சுயேச்சையாக வெற்றி பெற்ற நான்கு கவுன்சிலர்களும், அ.தி.மு.க.,வில் வாய்ப்பு தரவில்லை என்பதால், களம் கண்டவர்கள். சேர்மேன் பதவிக்கு, அ.தி.மு.க.,வை ஆதரிக்க விரும்பாமல், தி.மு.க.,வில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தலைவர் பதவியை தங்களுக்கும், துணை தலைவர் பதவியை தி.மு.க.,வுக்கும் தருவதாக பேசியுள்ளனர். ஒத்துக்கொண்ட தி.மு.க.,வினர், திடீரென மாற்றி பேசியுள்ளனர். இதனால் சுயேச்சைகள் இறங்கி வந்து, தலைவர் பதவியை வைத்து கொள்ளுங்கள், துணை தலைவர் போதும் எனக் கூறினர். இதற்கும் தி.மு.க., தரப்பில் பிடிகொடுக்காத நிலையில், தேர்தலை புறக்கணித்து, அ.தி.மு.க.,வினரை எளிதாக வெற்றி பெற செய்துள்ளனர். பெருந்துறை யூனியன் தலைவர் பதவியை, தி.மு.க., எளிதில் கைப்பற்றும் என்று, அ.தி.மு.க.,வினரே எதிர்பார்த்தனர். ஆனால், பாய வேண்டிய நேரத்தில் பதுங்கியதால், அ.தி.மு.க., வெற்றி பெற்று விட்டது. சேர்மேன் தேர்தல் புறக்கணிப்புக்கான காரணத்தை, கட்சி மேலிடம் மேம்போக்காக எடுத்துக் கொள்ளாமல், தீவிர விசாரணை நடத்தி, மாவட்ட தி.மு.க.,வின் பம்மி பதுங்கும் நடவடிக்கைகளுக்கு, முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு தொண்டர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X