பொது செய்தி

தமிழ்நாடு

'நிஷ்தா' பயிற்சி நிறைவு: 150 ஆசிரியர்கள் அசத்தல்

Added : ஜன 12, 2020
Advertisement

கோபி: கோபி வட்டார வளமையத்தில், முழு மேம்பாட்டு முன்னெடுப்பு பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர்களுக்கு, கோபி வட்டார வளமையத்தில், முழு மேம்பாட்டு முன்னெடுப்பு (நிஷ்தா) குறித்த பயிற்சி, கடந்த, 7ல் துவங்கியது. ஐந்து நாட்கள் நடந்த பயிற்சி நேற்று நிறைவு பெற்றது. கருத்தாளர்கள் மூலம், பயிற்சியில் பெற்ற அனுபவங்களை, பாட வாரியான செயல்பாடாக ஆசிரியர்கள் நேற்று வெளிப்படுத்தினர். பாடம் வாரியாக, பாடம் சார்ந்து, கதாபாத்திரமாக தங்களை ஈடுபடுத்தி, செயல்பாடு செய்து அசத்தினர். கோபி, நம்பியூர், அந்தியூர் ஆகிய நான்கு யூனியன்களை சேர்ந்த, 150 ஆசிரியர்கள் செயல்பாடுகள் செய்து அசத்தினர். தமிழ் பாடத்துக்கு, காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி, ஆங்கிலத்துக்கு, உயிரினங்களும் அதன் வாழ்விடங்களும், கணிதத்துக்கு காலம், அறிவியலுக்கு உணவு, சமூக அறிவியலுக்கு, ஐந்து வகை நிலங்கள் குறித்து செயல்விளக்கம் தந்தனர். ஆசிரியர் பயிற்றுனர் மெய்யப்பன் பயிற்சி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X