பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பாவை, திருவெம்பாவை விழா: 400 மாணவ, மாணவியர் பங்கேற்பு

Added : ஜன 12, 2020
Advertisement

ஈரோடு: திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடுதல் போட்டியில், பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில், பாவை விழா, திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடும் போட்டி, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், 25 பள்ளிகளை சேர்ந்த, 400 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது. ஐந்தாம் வகுப்பு பிரிவு, திருப்பாவை பண்ணோடு பாடுதலில், பாலக்காட்டூர் தொடக்க பள்ளி மாணவி பச்சியம்மாள் முதல் பரிசு, ரங்கபாளையம் கொங்கு பள்ளி மாணவி லஷ்மி மித்ரா இரண்டாமிடம், பாலக்காட்டூர் தொடக்க பள்ளி மாணவி இனியா மூன்றாமிடம் பெற்றனர். திருவெம்பாவை போட்டியில், ஈரோடு செங்குதர் தொடக்கபள்ளி சூர்யா முதல் பரிசு, வேளாளர் பள்ளி வர்ஷினி இரண்டாம் பரிசு, செங்குந்தர்பள்ளி மகுடேஸ்வரன் மூன்றாம் பரிசு பெற்றனர். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, திருப்பாவை பண்ணோடு பாடுதலில், இடையன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளி ஜெயவிக்னேஷ் முதலிடம்; சம்யுக்தா இரண்டாமிடம், புன்செய்புளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கேசவி மூன்றாமிடம் பிடித்தனர். இதேபிரிவில் திருவெம்பாவை பாடுதலில், நகராட்சி உயர்நிலைப் பள்ளி இடையன்காட்டு வலசு அரவிந்த் முதல் பரிசு, கருங்கல்பாளையம் முனிசிபல் பள்ளி பிரியதர்ஷின் இரண்டாம் பரிசு, திண்டல் வேளாளர் பள்ளி லோக ஜனனி மூன்றாம் பரிசு பெற்றனர். முதல் பரிசாக, 3,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 2,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X