சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ணாரி செக்போஸ்டில் முகாமிட்ட ஒற்றை யானை

Added : ஜன 12, 2020
Advertisement

சத்தியமங்கலம்: பண்ணாரி சோதனைச்சாவடியில் முகாமிட்ட, ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில், வனத்துறை, காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில், சோதனைச்சாவடி அமைத்து, வாகன சோதனை நடக்கிறது. நேற்று காலை, 7:00 மணியளவில் சோதனைச்சாவடி அருகே, திடீரென ஒற்றை யானை வந்தது. அங்கிருந்தவர்களை துரத்தியதோடு, வாகனங்களையும் வழிமறித்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சோதனைச் சாவடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் இரண்டு மணி நேரம் போராடி, வனத்துக்குள் யானையை விரட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X