சம்பவம் செய்தி

தமிழ்நாடு

55 வயது மனைவியை கொன்று 3 வழிகளில் தற்கொலை முயற்சி: குடும்ப தகராறில் முதியவர் ஆத்திரம்

Added : ஜன 12, 2020
Advertisement

ஈரோடு: குடும்ப தகராறில், மனைவியை கட்டையால் தாக்கி கொலை செய்த முதியவர், மூன்று வழிகளில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்டார்.
ஈரோடு, பழையபாளையம், அன்னை நகர் முதல் வீதியை சேர்ந்தவர் சுந்தரம், 64; கவுண்டச்சிபாளையத்தில் விசைத்தறி வைத்துள்ளார். இவரின் மனைவி ஜமுனா ராணி, 55; தம்பதியரின் மகன் கார்த்திகேயன். திருமணமாகி மதுரையில் வசிக்கிறார். மகளுக்கும் திருமணமாகி சென்னையில் வசிக்கிறார். ஈரோட்டில் தம்பதியர் வசித்த நிலையில், இருவருக்கும் இடையே தினமும் குடும்ப சண்டை நடந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு, வழக்கம்போல் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜமுனாதேவி தகாத வார்த்தை பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம், மரக்கட்டையால் மனைவியின் தலை, நெற்றியில் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜமுனா தேவி, சம்பவ இடத்தில் பலியானார். அதன் பிறகே விபரீதம் உணர்ந்து, தன்னிலைக்கு திரும்பி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கழுத்து, இரண்டு கை மணிகட்டுகளை, கத்தியால் அறுத்து கொண்டார். பின் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இந்த முயற்சிகள் பலன் தராததால், தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டார். நேற்று மதியம், 12:30 மணிக்கு எழுந்தார். மதுரையில் உள்ள மகன் கார்த்திகேயனுக்கு, மனைவியை கொலை செய்தது குறித்து, மொபைல்போனில் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு, அவர் தகவல் தந்தார். போலீசார் சென்று பார்த்தபோது, ஜமுனா தேவி இறந்தது உறுதி செய்யப்பட்டது. உடலைக் கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கழுத்து, கைகளில் ரத்த காயங்கள் இருப்பதால், சுந்தரத்தை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு முதியவரை கைது செய்தனர். மனைவியை கொன்ற முதியவர், மூன்று விதங்களில் தற்கொலைக்கும் முயன்று, பிழைத்துக் கொண்டது, அப்பகுதியில் அதிர்ச்சி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X