அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலீசுக்கு பாதுகாப்பில்லாததில் தமிழகம் முதலிடம் : ஸ்டாலின்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (142)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை, இதில் தான் தமிழகம் முதலிடம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு எஸ்ஐ., வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை அதிகாரியாக ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூறுகையில், வில்சன் கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது. 2 பேரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வில்சனின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதி அறிவித்துள்ள நிலையில், திமுக ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.




வில்சன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய அன்று, களியக்காவிளை சிறப்பு எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதிகளின் செயல் என்கிறார்கள். காவல் அதிகாரி கத்தியாலும் குத்தப்பட்டுள்ளார் எனச் செய்தி. காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை, இதில் தான் தமிழ்நாடு முதலிடம். குற்றவாளிகள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
13-ஜன-202012:02:39 IST Report Abuse
TAMILAN நீங்களே பெண்களுக்கு அச்சுறுத்தல் என்பது அனைவருக்கும் தெரியும்..
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
13-ஜன-202001:12:36 IST Report Abuse
Aarkay திருடர் முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால், பிரியாணி குண்டாயிசத்தில், தமிழகம் முதலிடம் பிடிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
13-ஜன-202000:07:19 IST Report Abuse
Aarkay சுடலை நீ சொல்றதுக்கெல்லாம் கைதட்ட வேண்டுமென்றால், நீ லயோலா கல்லூரியிலே போய் சொல்லு இல்லே, தகரமுத்துவை இடம் பார்க்க சொல்லு. பொதுவெளியில் நீ எது சொன்னாலும், அது எங்களுக்கு காமெடியாகவே படுகிறது. தினசரி இப்படி கருத்து கந்தசாமி போல, எதையாவது உளறாமல், சிங்கப்பூர், லண்டன் சென்று ஓய்வெடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X